Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் செயலமர்வுகள் உடன் நிறுத்துப்படல் வேண்டும் ; இலங்கை ஆசிரியர் சங்கம்


பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் கல்வி விடயங்கள் தவிர்ந்த செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்குப் பின்னர் இடம்பெறும் விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம். ரத்னாயக்க தெரிவித்தார்.  
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அத்தகைய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  
பாடசாலைகளின் பாதுகாப்பும் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியம். பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினரின் உறுதிமொழிக்கு அமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  
சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கு அமையவே நாம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமைப்படுத்த வேண்டியது  அவசியம். அதன் பின்னர் விளையாட்டு மற்றும் பிறக் கிருத்திய செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments