Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பயங்கரவாதிகளின் மற்றுமோர் பயிற்சி மையம்! சஹ்ரானின் சகாக்களால் அம்பலம்!


இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட நபர்கள் ஹம்பாந்தோட்டையிலும் தக்குதலுக்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அடையாளங்காணப்பட்ட அண்மையில் காத்தான்குடியில் கைதான 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரரால் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர், அங்கு வைத்தே அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காத்தான்குடி-ஒல்லிக்குளம் பகுதியிலும் நுவரெலியாவிலும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments