Home » » போலி கணக்குகளை ஆரம்பித்து ஐ.எஸ் இன் தொடர்பாடலை கண்டுபிடித்த புலனாய்வுப் பிரிவு!

போலி கணக்குகளை ஆரம்பித்து ஐ.எஸ் இன் தொடர்பாடலை கண்டுபிடித்த புலனாய்வுப் பிரிவு!

இலங்கையிலுள்ள பயங்கரவாதிகள், ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பை ஏற்படுத்த இணையத்தளம் ஊடாக இணையக் கூடிய டெலிகிராம் என்ற செயலியை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் அமைப்பு தொடர்பில் செய்தி மற்றும் தகவல்களை உலகுக்கு பகிர்வதற்காக இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சில காலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் பின்னர், மிகவும் நுட்பமாக போலி கணக்குகளை ஆரம்பித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தொடர்பு எவ்வாறு டெலிகிராம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது எனவும், பரிமாறப்படும் தகவல் தொடர்பிலும் கண்டுபிடித்துள்ளனர்.
டெலிகிராம் செயலி அவ்வளவு பிரபலம் இல்லை எனவும் அதன் மூலம் தகவல் பகிரும் போது இரகசிய தன்மை பாதுகாக்கப்படுகின்றமை இதற்கு காரணமாகும் என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |