Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாளை பாடசாலை! மீண்டும் தாக்குதல்! ஒரு முறைக்கு இரு முறை சிந்தியுங்கள்...

வெசாக் தின நிகழ்வுகளை விகாரைகளுக்கு அருகில் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் எதிர்க் கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பில் உறுதியான அத்தாட்சியொன்றை அரசாங்கம் வெளியிடாமல், பாடசாலைகள் திறப்பது குறித்து ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாட்டில் சமாதானமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உறுதிமொழியொன்று அவசியம் எனவும், ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே குரலில் இதனை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments