Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முதன் முறையாக இலங்கையருக்கு லண்டனில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் (MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதன்முறையாக பிரித்தானியர் அல்லாத முதலாவது தலைவராக இலங்கையரான குமார் சங்கக்கார இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் தற்போதைய தலைவராக உள்ள எண்டனி வேஃபோடி நேற்றைய தினம் லோட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கான தமது தலைமைப் பதவியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் குமார் சங்கக்கார ஏற்கவுள்ளார் என எண்டனி வேஃபோடி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments