Home » » அல் பக்தாதியின் கைது-விடுதலை ஆட்டமும்! இலங்கையின் உதிரக்களமும்!!

அல் பக்தாதியின் கைது-விடுதலை ஆட்டமும்! இலங்கையின் உதிரக்களமும்!!

மேற்கு ஆசியாவின் மிக நீண்ட ஆறு என்ற பதிவைப்பெற்ற யூபிரட்டிஸ் நதிப்பள்ளத்தாக்கில் இருக்கும் அல்-பகூஸ் பௌகானி (Al-Baghuz Fawqani) என்ற பகுதிக்கும் இலங்கைத்தீவுக்கும் யாதொரு நேரடித்தொடர்பும் இல்லை.
ஆனால் தமக்குரிய இறுதிக்கோட்டையாக இருந்த அல்-பகூஸ் இழக்கப்பட்டதால் தான் அதற்குரிய பழிவாங்கலை இலங்கைத்தீவில் காட்டினோம் என எந்தவித குற்றஉணர்வும் இல்லாமல் அபு பக்ர் அல் பக்தாதி என்ற போரியல் புனைபெயரை கொண்ட (Brahim Awad Ibrahim al-Badri) என்ற உருவம் வெளியிட்ட செய்தி குருரத்தனமான துன்பியலுக்குரியது.
ஐ.எஸ் என்ற குறியீட்டுப்பெயரால் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசாங்கத்தின் தலைவரான இவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா என்ற ஐயம் உலகின் இரண்டு முக்கிய வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் கடந்த 5 வருடங்களாகவே இருக்கின்றது. தமது விமானத்தாக்குதலில் அவர் முடமாகிவிட்டார் இனி அவர் இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்றெல்லாம் அமெரிக்கப்படைத்துறையும் ஒரு முறைகூறியது. ஆனால் அவ்வாறு எல்லாம் தனது தாக்குதலில் தான் நடந்தது என ரஷ்யா உரிமை கோரியது
ஆனால் இலங்கையின் உதிரக்களத்துக்குப்பின்னர் அல் பக்தாதி வெளியிட்ட காணொளி ஊடாக மாற்றம் வந்துவிட்டது. ஆனால் அமெரிக்காவுக்கு பக்தாதிக்கும் இடையிலான பூனை-எலி விளையாட்டு ஏறக்குறைய 15 வருடங்கள் பழையது.
கடந்த 2004பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் 4ஆந் திகதி ஈராக்கின் பலூஜா பகுதியில் வைத்து அமெரிக்க ராணுவத்தால் தேடப்பட்ட தனது பல்கலைக்கழக நண்பர் ஒருவரைக்காணச்சென்றபோது அவரது வீட்டில்அமெரிக்கத் துருப்புக்களால் கைது செய்யப்பட்டவர் பக்தாதி.
இந்த நண்பர் அமெரிக்கப்படையினரின் தேடுதல் பட்டியலில் இருந்தார். ஆனால் அதற்காக பக்தாதியெல்லாம் மென்போக்கானவர் கிடையாது. எனினும்தம்மால்கைதுசெய்யப்பட்ட பக்தாதியை ஆபத்துக்குறைந்த ஒருவராகவே அன்று அமெரிக்க ராணுவம் நோக்கியது.
இதனால் அதிதீவிரமற்றவர்களை சிறையிடும் தனது Compound 6 6 எனப்படும் ஆறாம் வளாகத்தில் சிறையிட்டது அமெரிக்கப்படைத்தரப்பு.
ஆனால் சில மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த பக்தாதி அதேஆண்டு செமடெம்;பர் 8 ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டார். ஆனால் இப்போது அதே பக்தாதியின் தலைக்கு உயிருடனோ அல்லது பிணமாகவோ 25 மில்லியன் டொலர் சன்மானத்தொகை நிர்ணயித்து அதே அமெரிக்கா தேடிவருகின்றது. இவ்வாறான ஒரு நிலையில்தான் ஐ.எஸ்சின்; அல் பர்ஹான் ஊடக வலையமைப்பின் ஊடாக 18 நிமிட காணொளிஒன்று கடந்த திங்கள்(2904 19)மாலை வெளிவந்தது ஏ.கே 47 ரகதுப்பாக்கியொன்று அருகில் சாத்தியபடிஇருக்க கறுத்த உடையில் கால்களை மடித்தபடி மருதாணிச்சாயம் பூசப்பட்ட தாடியுடன் 47 வயதான அல்பக்தாதி அதில் காணப்பட்டார்.
ஐ.எஸ்ஸின் ஏனைய உறுப்பினர்களுடன் மிகமென்மையாக அவர் பேசுகிறார். தம்மை இனங்காண முடியாமல் ஏற்கனவே அவர்கள் தடது முகங்களை துணியால் சுற்றியிருந்தாலும் அதனைக்கூட துல்லியமாக இனங்காண முடியாதபடி காணொளியில்அவர்களின் முகங்கள் தொழினுட்பரீதியில் மங்கலாக்கப்பட்டிருந்தன.
2014 இல் ஈராக்கின் பிரபலமான அல் நூரி மசூதியில் இருந்து ஐ.எஸ்ஸின் இஸ்லாமிய கலிபா ராஜ்யம் குறித்த பிரகடனத்தை செய்தபின்னர் பக்தாதியை உலகம் பகிரங்கமாக கண்டுகொள்ளமுடியவில்லை.
அதன்பின்னர் இப்போதுதான் காணொளிவடிவில் பகிரங்கமாக தோன்றியிருக்கிறார். இலங்கையின் குருரத்தாக்தல் குறித்தும் சூடான் அல்ஜீரியாவில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்தும் பேசியவர் எல்லாவற்றையும் வீழ்த்துவதற்கு அரபியில் புனிதப்போர் என அடையாளப்படும் ஜிஹாத்தான்சரியான வழி என்கிறார்.
எங்கிருந்து அவர் பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் சிரிய- ஈராக்கிய எல்லைப்புறப் பகுதியில் உள்ள பாலைவன மறைவிடம் ஒன்றில்இருந்து அவர் பேசியிருக்கக்கூடுமென கருதப்படுகிறது.
சிரியாவிலும் ஈராக்கிலும் தமது கலிபாவை இழந்த பக்தாதி இந்த இடத்தைத்தான் தனக்குரிய பாதுகாப்பான இடமாக கருதியிருக்கக்கூடும். தனக்கு பழக்கப்பட்ட இந்த இடத்தில் பதுங்கியிருந்தபடி தன்மீதான ராணுவ எதிர்வினைகளை அவர் சமாளிக்க முயலலாம்.
ஆனால் பக்தாதி குறித்த புலனாய்வுத்தகவல்கள் வேறுவிதமாகவும் உள்ளன. அவர் நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. அதுபோல இடமாற்றத்துக்கு ஆரவாரமான வாகனத்தொடரணிகளையும் அவர் பயன்படுத்தவதில்லை.
தனக்குரிய சில நெருக்கமான கூட்டாளிகளுடன மட்டும் தொடர்ந்தும் நகர்ந்துகொண்டிப்பவர் என கருதப்படுகிறது.
அவரிடம் அல்லது அவருடன் உள்ளவர்களிடம் செல்பேசிகள் ஏதும் இல்லை. அவ்வாறு இருந்தால் அதன் மூலமாக தாம் இருக்கும் இடத்தை இனங்காணக்கூடும் என்ற அச்ச நிலையே இதற்குக்காரணம்.
சிலவேளைகளில் அண்மைய காணொளியில் தோன்றியதை போல பாரம்பரிய இஸ்லாமிய உடையுடன் அல்லாமல் நவீன உடைகள் அணிந்தபடியும் இவர் இடம்மாறக்கூடும்.
தனக்கு நம்பிக்கைக்குரிய சாரதிஒருவர்செலுத்தக்கூடிய சிறிய வாகனம் ஒன்றில் அவர் இவ்வாறு சாதாரணமாக கடந்துசெல்லாம் என ஈராக்கிய புலனாய்வுத்துறை கூறுவதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும்.
ஆனால் பக்தாதி தேன்றிய புதிய காணொளியில் அவர் அதிர்ந்து பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் தனது இருப்புக்குறித்த ஒரு செய்தியை 5 வருடங்களுக்குப்பின்னர் வெளியிட முன்னர் தனது ஐ.எஸ் குறித்து உலகமே பரபரப்பாக பேசிக்கொள்ளவேண்டும் என்பதற்காக இலங்கைத்தீவின் அப்பாவி மாந்தர்கள் மிக குருரமாக குறிவைக்கப்பட்டமைக்குரிய ஆதாரங்கள் வந்துவிட்டன.
பக்தாதியே இதனை தனது செய்தியின் மூலம் நிறுவியுள்ளார். அதுவும் சிரியாவில் தமது பிடியில் இறுதிக்கோட்டையாக இருந்த அல்-பகூஸ் பகுதி அமெரிக்க மற்றும் எஸ்.டி.எப் எனப்படும் சிரிய ஜனநாயக படையினர் (Syrian Democratic Forces) உள்ளடங்கிய கூட்டுப்படையினரிடம் இழக்கப்பட்டமைக்கு பழிதீர்க்கவே இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என சொல்கிறார்.
ஐ.எஸ் இழந்த தனது அல்-பகூஸ் என்ற இறுதிக்கோட்டைக்கும் கொழும்பு கொச்சிக்கடை புனிதஅந்தோனியார்ஆலயம் அல்லது மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் போன்ற இறைவழிபாடுகளுக்காக கூடிய மாந்தர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்?
கடந்த மாதம் 23 ஆந் திகதியன்று ஐ.எஸ்ஸின் இறுதிக்கோட்டையான அல்-பகூஸ் பகுதியை கைப்பற்றிவிட்டதாக> அமெரிக்க சக சிரிய ஜனநாயக கூட்டணிப்படைத்தரப்பு பிரகடனப்படுத்தியது.
ஆனால் மேற்குலகு சார்ந்த அந்த வெற்றிப்பிரகடனம் இடம்பெற்று ஒருமாதகாலம் நிறைவடைவதற்கு 2 நாட்கள் இருந்த நிலையில் அதற்கு பழிவாக்குவதாக கூறி இலங்கையில் பெரும் கந்தக நாசகாரம் விதைக்கப்பட்டது.
அத்துடன் இந்த தாக்குதல் காவுகொள்ளல்களுக்கு பலியெடுக்கபட்டமைக்கு, ஐ.எஸ் அமைப்பே காரணம் என்பதால் அதனை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்பதாகவும் பக்தாதி கூறுகிறார்.
5 வருடங்களுக்குப்பின்னர் முதன் முறையாக காணொளி ஒன்றின் மூலம் பக்தாதி தோன்றிவிட்டார் என்ற செய்தி உலக ஊடகங்களுக்கு தீனிபோடக்கூடும். ஆனால் இலங்கையில் தமிழ்மக்கள் உட்பட்ட மக்கள் சமுகம் கொடுத்த விலை பெரும் துன்பியலுக்குரியது பக்தாதியின்; இந்தபழிவாங்கல் இலங்கையை இன்றுவரை பெரும் ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாக்கிவருகிறது
குறிப்பாக எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் என அல்பக்தாதி குறிப்பிடும் செய்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலனாய்வுத்துறையினரை கொண்ட ஒரு தேசமாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை கொண்ட நாடாகவும் உள்ள இலங்கையில் அதன் சாமானிய மக்களை பீடித்துள்ள அச்சநிலையை நீக்க எந்தளவுக்கு உதவக்கூடும்? இதுதான்; இப்போதுள்ள வினாவாகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |