Home » » மட்டக்களப்பில் ஷரியா பல்கலைக்கழகம் இல்லை

மட்டக்களப்பில் ஷரியா பல்கலைக்கழகம் இல்லை

அரசின் அனுமதியுடன் இயங்கும் ஷரியா பல்கலைக்கழகமோ உயர் கல்வி நிறுவனமோ மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அன்றைய உயர் கல்வியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் உயர் கல்வி நிறுவனமாக பதிவு செய்யுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக பல சிக்கல்கள் இருக்கின்றன.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை நிர்மாணிக்க 3 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளது.
இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பாடநெறிகள் நடத்தப்படுவதாக சிலர் கூறினாலும் அங்கு அப்படி எதுவும் நடப்பதில்லை. இதனால், ஷரியா பல்கலைக்கழகம் என்ற ஒன்று மட்டக்களப்பில் இல்லை எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |