Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு - மௌலவி கைது


தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுடன் நேரடி புலனாய்வு தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் மௌலவி ஒருவரை, கல்பிட்டி பிரதேசத்தில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வட்டரெக்க விஜித தேரர் மற்றும் சில முஸ்லிம் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக பல சேனா என்ற அமைப்பின் சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த நபர் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனா அமைப்பின் பிக்குமார் புகுந்து தலையீடுகளை மேற்கொண்டதால், அந்த ஊடக சந்திப்பு நடத்தப்படவில்லை.
கல்பிட்டி கந்தகுளியை சேர்ந்த 40 வயதான இந்த மௌலவி சிறு வியாபாரியாக இருந்து வருகிறார். சந்தேக நபரிடம் கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments