உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மூடப்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர் களுக்கான பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் மாணவர்களின் வருகை பெருமளவில் குறைவாக இருந்ததாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக தெரிவிக்கையில்
பாடசாலைகளில் ஆசிரியர்கள் வரவு வழமைபோல் உள்ளது. ஆனால் மாணவர்கள் வரவே குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.
இரண்டாம் தவணைக்காக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப் பட்டன.எனினும் இந்த மாணவர்களின் வருகை கூட திருப்திகரமாக இல்லை.
இந்தநிலையில் இன்று ஆரம்பமான ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளில் மாணவர்களின் வருகை ஒரு விகிதத்துக்கும் குறைவாக இருந்ததாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments