Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்லாறு பகுதியில் இருந்து இராணுவத்தினரால் வெடிப்பொருட்கள் மீட்பு


கிளிநொச்சி - கல்லாறுப் பகுதியில் வீடொன்றின் வேலிப்பகுதியில் கடதாசிப் பெட்டி ஒன்றினுள் இருந்து தமிழன் குண்டு என சொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தயாரிப்புக் குண்டு ஒன்றும், ஆர்.பி.யி குண்டு ஒன்றும் மீட்க்கப்பட்டுள்ளன.

கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகாமையில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாக குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்த பொழுது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குண்டை வெடிக்க வைப்பதற்கு தர்மபுரம் பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு குண்டை வெடிக்க வைக்கும் பணியில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இரண்டு குண்டுகளும் பழையவை எனவும் இவற்றை இனம்தெரியாத நபர்கள் குறித்த இடத்தில் வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கோ புகைப்படம், ,காணொளி எடுப்பதற்கோ படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











Post a Comment

0 Comments