Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்!

பாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆறு கிழமை; கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய கல்வியியல் கல்லூரிமாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்களை வழங்கி வைக்கும் வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கல்வி முறையில் ஏற்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது. டீ.எஸ். சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொது கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இன மத அடிப்படையிலான பிரிவினை கல்விமுறையை நோக்கி செல்வதா அல்லது பொதுக்கல்வி முறையொன்றினூடாக எதிர்காலத்தை வெற்றிகொள்வதா என்பது தொடர்பில் உடனடி தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

அனைத்து பாடசாலைகளையும் பொதுகல்வி முறைமையின் கீழ் கொண்டுவருவதே கல்வி அமைச்சருக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்குமான தற்போது இருக்கும் பொறுப்பாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments