திருகோணமலை புல்மோட்டையில் இனந்தெரியாதோரால் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு என்ஜின்களுக்கு இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை, ஜின்னாபுரக் கடற்கரையோரத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் 40 குதிரைவலுக் கொண்ட 2 என்ஜின்களுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மீனவர்களின் படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: