Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழமைக்கு திரும்பியது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதன்போது விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போதும் அங்கிருந்து வெளியேறுவோரும் வழமை போன்று செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வௌியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து விமான நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments