Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

8000 தாய்மாருக்கு மகப்பேற்று சத்திரசிகிச்சை -ஒப்புக்கொண்டார் கைதான மருத்துவர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று சர்ச் சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரான42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியரைபொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ள நிலையில் தாம் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திரசிகிச்சை புரிந்தமையை ஒப்புகொண்டதாக, சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியி ட்டுள்ளது.
இந்த வைத்தியர் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிக்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக் கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருநாகலை பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது.
இதன்போது அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
சட்டவிரோத குடும்பக்கட்டுப்பாடு மற்றும் வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியிருப்பதாக பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அந்த சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் நேற்று இரவு குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் சட்டவிரோத குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிக்சையை புரிந்தாரா? என்பது தொடர்பில் பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம் இந்த செய்தி வெளியானதை அடுத்து தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், தமக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
ஏற்கனவே அவர் 4000 சிங்களப் பெண்களுக்கு சட்டவிரோதமாக குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை புரிந்ததாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments