Advertisement

Responsive Advertisement

வெளிநாடு ஒன்றில் 58 பேரை பலியெடுத்த கோர சம்பவம்! மேலும் பலர் வைத்தியசாலையில்!

நைஜீரிய தலைநகர் நியாமீ பகுதியில் எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .
இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே குறித்த பாரவூர்தி வீதியில் கவிழ்த்து வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின் போது காயமடைந்த 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நைஜீரிய ஜனாதிபதி மஹாமடோ இசுபோவ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments