Home » » குண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ்! பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்

குண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ்! பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்


மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரமேஷ் என்ற நபர் தொடர்பில் பிபிசி உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
பெரிய பை ஒன்றுடன் தேவாலயத்திற்கு நுழைந்த தற்கொலை குண்டுதாரியை ரமேஷ் என்பவர் தடுத்துள்ளார். இதன் போது தான் உயிர்த்த ஞாயிறு ஆதாரனையை படம் பிடிக்க வேண்டும் என குண்டுத்தாரி தெரிவித்துள்ளார்.

பெரிய பைகளுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்க முடியாதென கூறி அவரை வெளியே நிற்குமாறு ரமேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால் குண்டுத்தாரிக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாத நிலையில் குண்டுதாரி அதிலேயே வெடித்து சிதறியுள்ளார்.
குறித்த நபர் தேவாலயத்திற்குள் சென்று வெடித்திருந்தால் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்திற்குள் பாரிய மக்கள் கூட்டம் இருந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்ட போதும், குண்டுதாரியை தடுத்து நிறுத்திய ரமேஷ் கொல்லப்பட்டுள்ளார்.
ரமேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கைவிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ரமேஷின் மனைவி கிருஷாந்தினி ஞாயிறு பாடசாலை ஆசிரியராகும். 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கற்பித்து வருகின்றார். அவர் கற்பிக்கும் பல மாணவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவரது பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டுள்ளனர். உறவினர்கள் சுனாமி பேரனர்த்தத்தின் போது உயிரிழந்துள்ளனர் என பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |