Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லாவின் கனவு நனவாகியுள்ளது - வியாழேந்திரன்

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பேசிய ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிசாத் பதியுதீன் போன்ற சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள். இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது என்று தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
கடந்த 40 நாட்கள் உபவாசமிருந்து நாட்டின் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து இயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிப்பதற்காக தேவாலயத்தில் கூடிய பச்சிளம் குழந்தைகள்இ கர்ப்பிணி பெண்கள்இ ஆண்கள்இ எனப் பலர் போன்றோர் தீயில் கருகி கொலை செய்யப்பட்டுள்ளனர். என்னுடைய உறவினர்கள் கூட இருவர் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்து இருக்கின்றார்கள். இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று பல துன்பங்களை இந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் நாங்கள் பார்த்துதுள்ளோம். இவற்றிற்கான சரியான தீர்வை மக்களுக்கு பெறக்கொடுக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வீணான பேச்சுக்களுக்கும்இ அவர் மீது பிழைஇ இவர் மீது பிழை என்ற நாடகம் ஆடுதலுக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என;றும் வியாளேந்திரன் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றினார்.

Post a Comment

0 Comments