கட்டார் நாட்டிற்கு  தொழிலுக்கு சென்ற நிலையில்  வாகன விபத்தில் உயிரிழந்த
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு , மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த கந்தசாமி நேசராசாவின் குடும்பத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

மூன்று வருடங்களுக்கு முன் தொழிலுக்கு சென்ற நிலையில் வீதி விபத்தில் மரணமடைந்த நேசராசாவின் குடும்பம் வலது குறைந்த நான்குவயது குழந்தையுடன் நான்கு பிள்ளைகளைக்கொண்ட மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பம் .
இந்த நிலையில்  குறித்த குடும்பம்  தொடர்பாக வாலிபர் முன்னணியின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை ( 04.04) வாலிபர் முன்னணியின் தலைவர் லே.தீபாகரன் தலைமையிலானா குழு நேரடியாக சென்று மூன்று மாதத்திற்க்கு போதுமான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் வாலிபர் முன்னணியின் செயலாளர் க.சசீந்திரன்,  மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர்  எஸ்.ஜனகன், சமூக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர்
இரா.சாணக்கியன் , மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளர் கே. சோபனன், மாவடிவேம்பு கிளைக்குழுவின் தலைவர் குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரா.சாணக்கியன் , மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளர் கே. சோபனன், மாவடிவேம்பு கிளைக்குழுவின் தலைவர் குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments