Home » » இலங்கை கிரிக்கெட்டை நாசமாக்கிய பெண்!வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

இலங்கை கிரிக்கெட்டை நாசமாக்கிய பெண்!வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

2017 இல் சிம்பாப்வே உடனான அதிர்ச்சி தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் ஊழல்கள் இடம்பெற்று வருகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டன.
ICC இன் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் விசாரணகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத சனத் ஜெயசூர்யா உட்பட இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் icc யால் Ban பண்ணவும் பட்டனர்.
சூரியவேவ விளையாட்டுமைதானத்தில் 2017 ஆம் ஆண்டு ஜூலை இடம்பெற்ற சிம்பாப்வே உடனான நான்காவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி வென்றது. இப்போட்டியின் சரியான தரவுகளை ICC யின் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் ICC 18 முறைக்கு அதிகமாக இலங்கை கிரிக்கட் ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது.
இதனை அடுத்து இலங்கையின் தெற்கில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு பெண் இலங்கை கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து, கிரிக்கட்டுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வந்துள்ளது ICC ஊழல் ஒழிப்பு பிரிவினரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாரிய சூது நிலையங்களுடன் தொடர்பு வைத்துள்ள குறிப்பிட்ட பெண் இலங்கையில் அவர்களின் தேவைக்கு ஏற்ப இயங்கி வந்துள்ளார். அவர் இலங்கை அணியில் ஒரு டசின் வீரர்களுக்கு மேல் பாலியல் உறவு வைத்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
தோல்வியடைந்த போட்டிகளில் இந்த பெண் மூலம் மோசடிகள் எவ்வாறு , எங்கு செய்யப்பட்டு இருக்கும் என்ற கோணத்தில் தற்போது ICC ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் இலங்கை பொலிஸ் விளையாட்டு துறையில் இணைந்துள்ளதுடன் ஊழல்களுக்கு எதிரான விசாரணைகளில் உதவ அவர்கள் ICC ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பயிற்சி கொடுக்கப்பட்டும் வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |