Advertisement

Responsive Advertisement

சமூக ஊடகங்கள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள உத்தரவு!



இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஒரே நாளில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கிளினால் நாட்டில் சமூக ஊடகங்கள் மீது கடந்த 21ஆம் திகதியிலிருந்து அரசு தடைவிதித்திருந்தது.
மீண்டும் கடந்த வாரம் சமூக ஊடகங்கள் தடை நீக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், மீண்டும் சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றதால் தடை நெீக்கப்படாது தொடர்ந்தது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்க இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பொறுப்புடன் அவற்றை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அலுவலகம் பயனாளர்களை கேட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments