Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் ஒருவரை எரித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை ஆண் ஒருவர், வீதியில் பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். கண்ணகிபுத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே இவ்வாறு எரிந்துக் கொலை செய்யப்பட்டவராவார்.
விநாயகபுரம் 9 ம் குறுக்கு வீதியில் மதுபோதையில் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது கீழே வீழ்ந்த குறித்த நபர் மீது, மற்றவர் பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து தீயிட்டவர் தப்பியோட முயற்சித்த போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பாலசுப்பிரமணியம் ரஞ்சன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments