Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம்


பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த விசேட கூட்டமானது கிழக்கு அபிவிருத்தி செயலணியின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் குகநாதன் தலைமையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கிழக்கு அபிவிருத்தி செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜெயசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதி கட்டமைகள், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய வாழ்வாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீண்டகால அபிவிருத்திகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments