ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றிரவு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செய்தியாளர்: ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாரா?
கோத்தபாய: தயார்... தயார்.
செய்தியாளர்: உங்களை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோத்தபாய: மகிந்த ராஜபக்ச வருகிறார். விபரங்களை அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
செய்தியாளர்: உங்களை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோத்தபாய: அது முக்கியமல்ல. நாட்டை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே முக்கியம். வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக மாற்றம் ஏற்பட்ட பின்னர், கொள்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதே முக்கியமானது.
செய்தியாளர்: ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
கோத்தபாய: உலகில் உள்ள பிரதான நாடுகள் கூட பயங்கரவாதத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டுள்ளன. அந்நாடுகளை பாராட்டி, அதனை வெற்றி என கருதுகின்றனர்.
எனினும் உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்த பின்னர், தோற்கடித்தவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இது மிகவும் அநீதியானது. இதில் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
நாங்கள் போரை மட்டும் செய்யவில்லை. போருக்கு பின்னர் பெரியளவில் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கினோம். அவற்றை மறந்து விட்டனர்.
செய்தியாளர்: நீங்கள் உங்களது வெளிநாட்டு குடியுரிமையை கைவிடுவீர்களா?.
கோத்தபாய: அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
செய்தியாளர்: சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு எப்படி இருக்கின்றது?
கோத்தபாய :சிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை. இலங்கையர்கள் என்ற வகையில் அனைத்து இனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. நாங்கள் பொதுவாகவே இந்த பிரச்சினையை அணுகுவோம்.
செய்தியாளர்: முழு நாடும் உங்களது தயார் நிலை குறித்து எதிர்பார்த்துள்ளது?
கோத்தபாய: மிகவும் நல்லது.
0 Comments