Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்பவர்கள் தொடர்பான சட்டத்திட்டங்களை கடுமையாக்க யோசனை


ரயில் தண்டவாளத்தில் நடப்பது தொடர்பாக காணப்படும் சட்ட திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ரயில்வே திணைக்களம் ஆராய்ந்து வருகின்றது.

ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி இடம்பெறும் உயிரிழப்புகளை கருத்திற்கொண்டே இவ்வாறாக ஆராய்ந்து வருகின்றது.

குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் நாளாந்தம் குறைந்தது இரண்டு பேராவது மோதி உயிரிழக்கின்றினர். கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் 60ற்கும் மேற்பட்டோர் இவ்வாறாக உயிரிழந்துள்ளனர்.

ரயில்வே கட்டளைகள் சட்டத்தின்படி ரயில் தண்டவாளத்தில் நடப்பது சட்டவிரோதமாகும். ஆனபோதும் சில பிரதேசங்களில் போக்குவரத்து இலகு கருதி பொதுமக்கள் ரயில் தண்டவாள பகுதியை பயன்படுத்துகின்றனர். இதன்போது சிலர் ரயில் தொடர்பான அவதானம் இன்றி செயற்படுவது மற்றும் தொலைபேசி பயன்பாடுகள் , காது செருகிகளை பயன்படுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் ரயில்களில் மோதி உயிரிழக்க நேரிடுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆராயப்பட்டு வருகின்றன. -(3)

Post a Comment

0 Comments