Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணேஸ்வரத்தில் சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பதற்றம்!

சிவராத்திரியை முன்னிட்டு, திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் நிர்வாகத்தினர் நேற்று சிவலிங்கமொன்றை நிறுவினர். இந்நிலையில் இன்று காலை குறித்த சிலை உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்த கோயில் நிர்வாகத்தினர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில், சிவலிங்கத்தை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே உடைத்ததாக குறித்த பகுதியில் உள்ள கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியதென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதாகக் கூறி, கோயில் நிர்வாகத்தினர் சிலையை வைக்க முற்பட்டனர். எனினும், அவ்வாறு சிவலிங்கத்தை வைத்தால் புத்தரின் சிலையை வைப்பதாக கூறி அங்குள்ள சிங்களவர்கள் முரண்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், சிவலிங்கத்தை வைப்பதற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அதற்கமைய திருக்கோணேஸ்வரம் கோயில் நிர்வாகத்தினர் சிவலிங்கத்தை நிறுவியுள்ளனர்.

Post a Comment

0 Comments