கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்று இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹொங்கொங் நோக்கி பயணித்த விமானமே தரையிறக்கப்பட்டதாகவும், அதில் 11 பேர் பயணித்தனர் என்றும் கூறப்படுகிறது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி விமானத்தின் எரிபொருள் கடலுக்குள் திறந்து விடப்பட்டுள்ளது.
0 Comments