Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அபிநந்தன் மாலை 6 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைப்பு


பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் மாலை 6 மணிக்கு ஒப்படைக்கப்படுகிறார்.
இந்தியத் தரப்பில் வாகா-அட்டாரி எல்லையில் இருந்து அரை கி.மீ. முன்பாகவே நிறுத்தப்பட்டன ஊடகங்கள். தினமும் இந்த எல்லை வாயிலை மூடும் நிகழ்வையும் அணி வகுப்பையும் காண ஆயிரக் கணக்கான மக்கள் கூடுவர். இன்று அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டாலும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ள நிலையில் அங்கு மக்கள் ஆயிரக் கணக்கில் கூடியுள்ளனர்.
அட்டாரி – வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் துணை கமிஷனர் ஷிவ் கில்லார் சிங் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments