Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அபிநந்தன் பரஷூட்டில் இறங்கியபோது என்ன நடந்தது? நேரில் பார்த்தவரின் சாட்சி


இந்திய விமானி அபிநந்தன் ஒட்டிய ஜெட் விமானம் பாகிஸ்தானின் சூட்டுக்கு இலக்காகி பரஷூட்டில் அவர் பாகிஸ்தான் பகுதிக்குள் இறங்கியபோது என்ன நடந்தது என்பதை நேரில் கண்டா ஒருவர் விபரித்துள்ளார்.
“அவரின் (அபிநந்தன் ) பரஷூட்டில் இந்திய கொடியை கண்டேன். அவர் இந்தியன் என்பதை உணர்ந்தேன். அவரது விமானம் தாக்கப்படுவதையும் கண்டேன். அப்போது அவர் பராஷூட்டில் வெளியே வந்தார்”. என்று பாகிஸ்தானின் காஸ்மீர் பகுதி பிம்பேர் மாவட்ட வாசியான மொஹமட் ரசாக் சவுத்ரி பிபிசி க்கு தெரிவித்தார்.
“அவர் கீழே இறங்கிய இடத்துக்கு உள்ளூர் வாசிகள் ஓடிச்சென்றார்கள். அவர்கள் தன்னை தாக்க கூடும் என்று அவர் பயந்தார். சில ஆண்கள் மிகவும் கோபத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் அவரை தாக்கினார்கள். சிலர் அவர்களை தடுத்தார்கள். அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் இராணுவம் வரும்வரை அவரை தனியே தனியே விடுங்கள் என்று அங்கிருந்தவர்களுக்கு கூறினேன்” என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments