மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும் புலானி விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தோகோன் பழங்குடியினர் அடிக்கடி புலானி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
இவ்வாறு புகுந்தவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்தனர்.
சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள புலோனி விவசாய மக்கள் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகினறனர்.


0 Comments