மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவும் எனவும், அதிக வெப்பம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments