Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை இராணுவத்தின் 67 இராணுவ அதிகாாிகளை கைது செய்யுங்கள், ஐ.நா சபையின் அதிரடி உத்தரவு..




போா் குற்றங்களை செய்த இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மே ஜா் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜகத் டயஸ், கமால் குணரத்ன, ஜகத் ஜயசூாிய உள் ளிட்ட 67 இராணுவ அதிகாாிகளை கைது செய்யுமாறு ஐ.நா மனித உாிமைகள் ஆ ணையாளா் கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள அவர், இவர்கள் குறித்த நாடுகளு க்கு வந்தால் அவர்களைக் கைதுசெய்து வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது. யுத்தக் குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை
சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அந்த அறிவித்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Post a Comment

0 Comments