Home » » மன்னார் மனிதப் புதைக்குழி எலும்புக்கூடுகள் 1499 – 1719 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாம் : ஆய்வு அறிக்கை கூறுகிறது

மன்னார் மனிதப் புதைக்குழி எலும்புக்கூடுகள் 1499 – 1719 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாம் : ஆய்வு அறிக்கை கூறுகிறது


மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே என அது தொடர்பான மாதிரிகள் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று அந்த அறிக்கையிலுள்ள தகவல்கள் வெளியிப்பட்டுள்ளன. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |