Home » » கஞ்சாவுக்கு பெயர்போகும் யாழ்ப்பாணம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கஞ்சாவுக்கு பெயர்போகும் யாழ்ப்பாணம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்!


வடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதில் 90 சதவீதம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்டுள்­ள­து­டன், 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வில் 90 சதவீதமானவை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே மீட்கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்டங்களிலும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்கப்பட்டுள்­ளது.
வல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், கிளி­நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் சந்தேகத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |