Home » » இலங்கையில் காட்டுக்குள் சுற்றித்திரியும் குள்ள மனிதர்கள் யார்? : வேற்றுக் கிரக வாசிகளா?

இலங்கையில் காட்டுக்குள் சுற்றித்திரியும் குள்ள மனிதர்கள் யார்? : வேற்றுக் கிரக வாசிகளா?


சில வாரங்களுக்கு முன்னர் அம்பாறையில் விவசாய கிராமமொன்றில் குள்ள மனிதர்களை ஒத்த உருவங்களை கண்டதாக அந்த கிராமத்திலிருந்தவர்களினால் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மகாவிலாச்சிய பகுதியிலும் அதேபோன்ற உருவங்களின் நடமாட்டத்தை கண்டதாக அந்த பிரதேசவாசிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் குறித்த குள்ள மனிதர்களின் தாக்குதலால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு அடி உயரத்தை கொண்டுள்ள அந்த உருவங்கள் கறுப்பு நிறத்தை கொண்டவையெனவும் முகத்தில் முடி இருப்பதாகவும் அதனை கண்டதாக தெரிவிக்கின்றவர்கள் கூறியுள்ளனர். அந்த உருவங்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடியதை கண்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பாக குறித்த பிரதேசங்களில் பொலிஸாரினால் தேடுதல் நடத்தப்பட்டுள்ள போதும் அவ்வாறாக எந்த உருவங்களையும் கணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்களை தொடர்ந்து குறித்த பிரதேசங்களில் மக்களிடையே அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த உருவங்கள் வேற்றுக்கிரகவாசிகளா என்ற கேள்விகளும் பிரதேசவாசிகளினால் எழுப்பப்படுவதாகவும் கூறப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |