Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனியார் கல்வி நிலையங்களுக்கு நாளை பூட்டு!!



வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை நாளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத் தலைவர் தி. கோபிநாத் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகா வித்தியன் தினம் பிரமாண்டமான முறையில் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக , தனியார் கல்வி நிலையத்தின் ஒன்றிய நிர்வாகம் இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதற்கமைவாக நாளை ஞர்யிற்றுக்கிழமை 11 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புக்களும் நிறுத்தப்படும். உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமை போன்று நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments