Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை தமிழ் பிரதேசசெயலர் பிரிவை தரமுயர்த்த நடவடிக்கை!

கல்முனை தமிழ் பிரதேசசெயலர் பிரிவாக தரமுயர்த்துவதற்கு, முஸ்லிம் காங்கிரசின் ஹாரீஸே தடையாக இருப்பதாக முன்னதாக அரசாங்கத் தரப்பிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கூறப்பட்டிருந்தது.
தமிழ் பிரதேசசெயலர் பிரிவாக கல்முனையை தரமுயர்த்த வேண்டுமென வழக்கத்திற்கு மாறாக, இன்று இரா.சம்பந்தனும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களிற்குள் இது குறித்து சாதகமாக முடிவை தருவதாக பிரதமர் தெரிவித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலைய கடைகள், அமைச்சர் ஹரீசனால், அவரது பிரதேசத்தை சேர்ந்தவர்களிற்கே வழங்கப்பட்டிருந்தது. இதனால் வவுனியா வர்த்தகர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வேறு மாற்று ஏற்பாடொன்றை கண்டடைவதென்றும் இன்று முடிவானது.
இதேவேளை, நாளை தேசிய அரசு அமைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படாமல், அடுத்த வாரம் சமர்ப்பிப்பது தொடர்பில் ஐ.தே.க ஆராய்ந்து வருவதையும் இந்த சந்திப்பின்போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments