Home » » வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம்; விஜயகலா மகேஷ்வரன்!

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம்; விஜயகலா மகேஷ்வரன்!

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடமே என கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஷ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு அவர்களின் தலைமையில் இன்று (09) மாலை கல்லூரி வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்தினை முன்வைத்தார். மேலும் கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள் கருத்துரைக்கையில்.,
எமது ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சிபீடமேற நூறு வீதம் பிரதான பங்காற்றியவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே. இதனால்தால் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
உண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்கால தீர்வை நோக்கியே எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர சுயநலத்திற்காகவல்ல.
பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களிடம் பல்வேறுபட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி இருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிக்கு இரண்டு மில்லியன் ரூயாய்களை ஒதுக்கி எனது பணியினை இலகுபடுத்தியுள்ளதாக கூறினார்.
கடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பக்கபலமாய் நின்றுதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பினை தருவார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலரது விமர்சனங்கள் எங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது தெற்கிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எனது கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குபலமே முக்கியபங்கு . இதுவே எங்களது மக்களை கௌரவப்படுத்தி என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக எங்களது பிரதமர் நியமிக்க காரணியாகும்.
எனக்கு கிடைத்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சு பதவியானது வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.
நான் அம்பாறை மாவட்டத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளேன் . நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பவியேற்ற பின்பு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு முதல்முறையாக வருகை தந்தமை எனக்கு பெருமையை தேடித்தந்துள்ளது.
யுத்தத்தினால் பாதிப்புற்றது எமது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே, யுத்தத்தினால் போராடிவந்த இரு மாகாணங்களும் இன்று மக்களின் தேவைக்கேற்ப போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்காக இயற்கையோடு போராடவேண்டியுள்ளது.
இதன் போது கல்லூரி முதல்வர் அருட்சசோதரர் செபமாலை சந்தியாகு அவர்களிடமும் ,பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினரிடமும் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
கல்லூரியின் பிரதான குறைபாடான தொழிழ்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் கௌரவ அஹிலவிராஜ் காரியவசம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு அடுத்த மாதம் ஒதுக்கப்படும் வரவு செலவு திட்ட நிதியில் அபிவிருத்திக்கு நிதியினை ஒதுக்கி தருவதாக உறுதிளித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |