Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் முறைகேடாக நடந்து கொண்ட நான்கு பேருக்கும் இடமாற்றம்!

பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடாக நடந்து கொண்ட பதிவாளர்கள் உட்பட நான்கு பேருக்கும் 07.02.2019.வியாழகிழமை மாலை இடமாற்றம் வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கல்வியற் கல்லூரிகளின் ஆனையாளர் எம்.என்.ஏ.பண்டார அவர்களினால் குறித்த நான்கு பேருக்குமான
இடமாற்றத்திற்கான கடிதம் பத்தனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு தொலை நகல் முலமாக அனுப்பிவைக்கபட்டு இருந்தாக கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார்.
இந் நிலையில் முன்னெடுக்கபட்டு வந்த ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பதிவாளர்களுக்கு பதிலாக தற்காலிகமாக வேறு பதிவாளர்கள் கல்லூரிக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாகவும் தெரிவிக்கபடுறது.

Post a Comment

0 Comments