Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் (களுவாஞ்சிகுடி) உலக புற்றுநோய் தின நிகழ்வு

( அஸ்ஹர் இப்றாஹிம்)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை  புற்றுநோய் தடுப்பு பிரிவு , பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஆசிரியர் மற்றும்  மாணவர்களின் பங்குபற்றுதலுடன் உலக புற்றுநோய் தின நிகழ்வுகளை இன்று ( 6 )  ஒழுங்கு செய்திருந்தது.
பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை  புற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.கிறிஷ்ணவேணி மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டு புற்று நோய் சம்பந்தமான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தியதுடன் விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் இடம்பெற்றது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புற்று நோய் பற்றிய கையேடுகளையும் ஆசிரிகைகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்றையும் ஒழுங்கு செய்திருந்தனர்.


இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள்  , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments