இலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்றைய நாளை, கரிநாள் என்W குறிப்பிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் வெளியிலும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
|
தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லாத இன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இன்றைய தினத்தில் போராட்டங்களை நடத்துமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() ![]() |
0 Comments