இலங்கையில் முழுமையாக தென்படும் சூரிய கிரகணம் ஒன்று இந்த வருடம் டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது, யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையில் முழுமையாக இருள் சூழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் பகுதி அளவில் இந்த சூரிய கிரகணம் தென்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments