Advertisement

Responsive Advertisement

அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷடம்! அரசாங்கம் இன்று அறிவிப்பு


அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமை ஒரு அநீதியான செயல் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, உரிய நிவாரணத்தை மீளவும் பெற்றுக் கொடுக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும் வேளையிலேயே அமைச்சர் கிரியெல்ல இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது வந்தன. இந்நிலையில் அரச ஊழியர்களுக்கும் அந்த சலுகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் வரி எதுவும் இன்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் வாய்ப்பு அரசாங்க ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments