Home » » தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட புதிய விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட புதிய விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தேசிய விஞ்ஞான மன்றத்தினால் ( National Science Foundation) அகில இலங்கை  ரீதியில் நடாத்தப்பட்ட புதிய விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் ( Science Research project competition ) முதல் 20 இடங்களுக்குள் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடிமாணவர்கள்  தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்தற்கும் நற்பெயரையும் புகழையும் ஈட்டித்தந்துள்ளனர்..

முதலாவது போட்டியில் 100 ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாவது ஆராய்ச்சியில் 66 ஆய்வுகளும் பின்னர் 20 ஆய்வுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டப் போட்டிகள் இம்மாதம்  31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறுவதுடன்  இதில் முதல் 10 பாடசாலைகளுள் ஒன்றாக தெரிவு செய்யப்படும் போது அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில்  இடம்பெறவுள்ள சர்வதேச ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் இம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.
இப்பாடசாலை மாணவர்கள் இரண்டு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் இப்பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் எஸ்.தேவகுமார் அவர்களினதும்  உயிரியல் ஆசிரியை திருமதி ஆர்.ஜெகஜோதி அவர்களினதும் வழிகாட்டலிலும் முதலாவது ஆராய்ச்சியில் நீருடன் கலந்துள்ள கற்மியம் பார உலோகங்களை  நாம் உண்ணும் நாவற்பழத்தின் விதைகளை பயன்படுத்தி நீரிலிருந்து அகற்றும் ஆராய்ச்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆராய்ச்சியாக நீரிலுள்ள கற்மியம் பார உலோகங்களை களிமண்ணை பயன்படுத்தி நீரிலிருந்து அகற்றி அவ் ஆராய்ச்சியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
இரண்டு குழுக்களாக இப்பாடசாலை மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். முதலாவது குழுவில் என்.கோமிகா , பீ.லிசாகரி , வீ.யுவன்ராஜ் ஆகிய மாணவர்களும் இரண்டாவது குழுவில் கே.படன்ஜெலி , ரீ.டிலோஜன் , கே.அபினயா ஆகிய மாணவர்களும் இடம்பெற்றனர்.
ஆராய்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் .தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |