இந்த ஆண்டு நிகழும் 23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வார இறுதி சனி ஞாயிறு நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு குறைந்துள்ளது.
குறிப்பாக தமிழ் , சிங்கள புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.
இவ்வாறு வார இறுதித் தினங்களில் வரும் விஷேட தினங்கள் 15 ஆகக் காணப்படுகின்றன.
பௌணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளன.
20 வர்த்தக விடுமுறைகளில் 8 விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


0 Comments