Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று கையளிப்பு!

புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்களை ஐக்கிய தேசிய முன்னணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கையளிக்கப்படும் அமைச்சர்கள் தொடர்பான பெயர் விபரங்களை ஜனாதிபதி பரிசீலனை செய்ததன் பின்னர் அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறுமென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கவே திட்டமிடப்பட்டுள்ள போதிலும் 30 - 40 பேருக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் குறித்த அமைச்சரவை இடம்பெறலாம் என்பதுடன் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களையும் நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 19 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 30 பேரையும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 40 பேரை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்று பாராளுமன்றம் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Post a Comment

0 Comments