|
இலங்கையின் வான்பரப்பின் ஊடாக அதிகளவான விமானங்கள் பயணம் மேற்கொண்டதால், வருமானம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிறைவடைந்த 24 மணித்தியாளங்களில் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக விமான சேவை அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
குறித்த காலப்பகுதியினுள் 220 விமானங்கள் இலங்கையின் விமான எல்லையின் ஊடாக பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.அதன் மூலம் இலங்கைக்கு 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பேத்தாய் சூறாவளி காரணமாக இந்திய விமான எல்லையின் ஊடாக பயணிக்க வேண்டிய விமானங்கள் இலங்கையின் விமான எல்லையினுள் பறந்தமையினால் இந்த வருமானம் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் கஜா புயல் காரணமாக 200 விமானங்கள் இலங்கையின் விமான எல்லையின் ஊடாக பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|


0 Comments