ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமையவுள்ள நிலையில் நிதி அமைச்சு தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முன்னைய தேசிய அரசாங்க காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினரான ரவி கருணநாயக்கவுக்கு நிதி அமைச்சைக் கொடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் பெரும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணநாயக்கவுக்கான தமது ஆதரவை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ள நிலையிலும் நிதி அமைச்சுக்கு வேறொருவரின் பெயர் அடிபடுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் தமக்கு நிதி அமைச்சு பதவி கிடைக்காத பட்சத்தில் சர்ச்சைக்குரிய தீர்மானத்தில் ரவி கருணநாயக்க தமது ஆதரவானோர்களுடன் எடுக்கக்கூடும் என மேலதிக தகவல் ஒன்று கூறுகின்றது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய சிக்கல் நிலை ஒன்றுக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments