பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரி, தொழிலாளர்களின் பிள்ளைகள் இருவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
அடிப்படைச் சமபளம் ஆயிரம் ரூபாவுக்கு குறைவான தொகை ஒன்றில், கையெழுத்திட தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளதாகவும், இவ்வாராம் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்தே இவர்கள் இருவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
0 Comments