சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை இன்றிரவு அவசரமாக கூட்டுகிறார்.
இதன்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாவிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்குவதற்கு அவர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்ஸா, இந்திக்க பண்டார ஆகியோர் இன்றைய தினம் நாடாளுமன்றில் ஐக்கியதேசியக் கட்சிப் பக்கம் தாவினர்.
இந்த நிலையிலேயே இனிமேல் கட்சி தாவுவோர்மீது கடும் நடவடிக்கையை எடுப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
0 Comments