Home » » இலங்கையில் மீண்டும் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்; சற்றுமுன் வெளியாகியது புதிய தகவல்!

இலங்கையில் மீண்டும் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்; சற்றுமுன் வெளியாகியது புதிய தகவல்!

இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின்பிரதமராக ரணில் பவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா உச்ச நீதிமன்றின் அடுத்தடுத்த தீர்ப்புக்களைஅடுத்து, உள்ளூர் நேரப்படி இன்றைய தினம் இரவு தொலைபேசி ஊடாக சிறிலங்காஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரணிலை தொடர்புகொண்டு பிரதமராக பதவியேற்க வருமாறுஅழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜித்தசேனாரத்ன ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.
இதற்கமைய டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின்பிரதமராக ரணில் பதவியேற்பார் என்றும் அதனை அடுத்து அமைச்சரவை பதவியேற்கும் என்றும்ராஜித்த கூறினார்.
எனினும் புதிய அமைச்சரவையில் எத்தனை பேர் உள்ளடங்குவர்என்பது குறித்தோ, அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்பது தொடர்பிலோ இப்போதைக்குகூற முடியாது என்று ராஜித்த ஐ.பீ.சி தமிழுக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சிறிலங்கா ஜனாதிபதி முன்னிலையில் ரணில்விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றதை அடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்பது தொடர்பில்தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றுமொரு முக்கியஸ்தர்ஐ.பீ.சி தமிழுக்குத் தெரிவித்தார்.
பெயரைக் குறிப்பிட விரும்பாத ஐக்கிய தேசிய முன்னணியின்முக்கியஸ்தரின் தகவல்களுக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை 30 பேரைக்கொண்டதாக இருக்கும் என்றும், இந்த அமைச்சரவையும் டிசெம்பர் 17 ஆம்திகதியான திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக்கொள்ளவுள்ளது.
இதேவேளை ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் மைத்ரிபால சிறிசேனதலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்குழுவாக இணைந்துகொள்ளவும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
அதனால் இவர்களையும் இணைத்துக்கொண்டு அவர்களில் ஆறு பேருக்குஅமைச்சரவையிலும் இடம்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்முக்கியஸ்தர் ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான பேச்சுக்கள் இன்று மாலை முதல் அலரி மாளிகையில்ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் இடம்பெற்றதாகவும்அவர் தெரிவித்தார்.
இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து நாளைய தினம் ராஜினாமாசெய்யவுள்ளதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சஅறிவித்துள்ளதாக அவரது கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றில் கடந்த நவம்பர் 14 மற்றும் 16 ஆம்திகதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ருந்ததற்கு அமைய மேன்முறையீட்டுநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட அனுமதி குறித்த மனுக்களுக்கு அமைய மஹிந்தபிரதமராக பதவி வகிக்கவும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்அமைச்சர்களாகவும் பதவி வகிக்க சட்டத்தில் அனுமதியில்லை என்று தெரிவித்து இடைக்காலதடை உத்தரவையும் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் பிரதமர் பதவியொன்றே நாட்டில் இல்லாத நிலையில்மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும், அது தொடர்பில் நாளையதினமான டிசெம்பர் 15 ஆம் திகதி விசேட அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாகவும் மஹிந்ததரப்பு அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |